மாமல்லபுரம் வரும் ஜி20 பிரதிநிதிகள்; சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை!
ஜி20 மாநாட்டிற்கான பிரதிநிதிகள் கருத்தரங்கள் சென்னையில் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20. இந்த அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் சென்னை நாளை தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வருகை தருகின்றனர். அவர்கள் பிப்ரவரி 1ம் தேதியன்று மாமல்லபுரத்தில் உள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டைக்கல் ஆகியவற்றை சுற்றி பார்க்க உள்ளனர்.
இதனால் மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவை கொண்டு சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையிலும் பிரதிநிதிகள் வருகையையொட்டி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Edit by Prasanth.K