உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி பிரதமர் மோடி! – பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!
ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா தற்போது ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜி20 உலக நாடுகளின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு இப்போதிருந்தே தயாராகி வருகிறது.
ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவது குறித்து பேசியுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் ”ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்துடன் ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன்மூலம் அமைதியான, நிலையான உலகத்தை எங்கள் நண்பர் பிரதமர் மோடி ஒன்றிணைப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் மோடியை எங்கள் நண்பன் என குறிப்பிட்டு ஜி20 தலைமை ஏற்பிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Edited By Prasanth.K