திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (19:29 IST)

வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்- ஜி.வி. பிரகாஷ் கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிக்சூடு நடத்தியதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.வி. பிரகாஷ்.
 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லை ஆலை நோக்கி இன்று காலை பேரணியாக சென்றனர். 
 
அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.
 
இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ஜி.வி பிரகாஷ் “சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.