வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (15:43 IST)

திருவண்ணாமலையில் 300-வது பௌர்ணமி கிரிவலம்- பக்தர் தவழ்ந்து சென்று வழிபாடு!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் (65). இவர் குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் கீழ்புறம் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணா மலையார் தியான மண்ட ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். 
 
இந்த ஆலயத்தின் மேல் தளத்தில் லிங்க வடிவில் அண்ணா மலையாரும், வாயில் படியில் விநாயகர் முருகனும் எதிரே நந்தீஸ்வரரும், கீழ்த்தளத்தில் தியான மண்டபத்தில் 18 சித்தர்கள் அருள் பாலிக்கின்றனர். 
 
8 திசைகளில் ராசிக்கு ஏற்றபடி லிங்கங்கள் பிரதஷ்டை செய்யப்பட்டு ள்ளது. மேலும் விநாயகர், முருகன், நந்தி தேவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர், சாய்ராம், அப்பர், சுந்தரர்,திருநாவுக்கரசு, ஞானசம்பந்தர், ஆதிசங்கரர், புத்தர், வள்ளலார்,10 அவதார நாகேஸ்வரி, அருவா கருப்பு என பல்வேறு தெய்வங்கள் அருள் பார்க்கின்றன. 
 
இங்கு தினந்தோறும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் பக்தர் கோபிநாத்  திருவண்ணாமலை நான்கு கோபுரம் சுற்றிய மாட வீதியில் இரண்டு பாதங்கள் தரையில் படாமல் தவழ்து உலா வந்து சாமி தரிசனம் செய்தார். 
 
அதன்பின் மாலை 6 மணிக்கு பௌர்ணமி தொடங்கும் வேளையில் 500 பக்தர்களோடு 14 கிலோமீட்டர் கிரிவலம் சுற்றி வந்தனர். 
 
இது சம்பந்தமாக பக்தர் கோபிநாத் கூறியதாவது:-
 
2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடைவிடாத நூறாவது கிரிவலம் வாடிப்பட்டியில் இருந்து திருவண்ணா மலைக்கு 340 கிலோமீட்டர் நடந்தே சென்று திருவண்ணா மலையில் கிரிவலம் சுற்றினேன்.
 
அதன்பின் 2016 - ஆம் வருடம் 200 வது இடைவிடா 
கிரிவலத்தை 14 கிலோ மீட்டர் உருண்டே வலம் வந்தேன். 20 ந்தேதி 300 வது கிரிவலம் திருவண்ணாமலை மாடவீதியை பாதம் படாமல் சுற்றி வந்து பின் மாலை 6 மணிக்கு 500 பக்தர்களோடு திருவண்ணா மலையை சுற்றி வழிபாடு செய்தேன்.
 
மேலும் சமூகப் பணியாக அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசு, ஏழை எளிய மாணவ மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பல்வேறுமருத்துவ முகாம்கள், ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி சேலை,
துறவிகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் ஆகியவை அண்ணாமலையார் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.