ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (15:43 IST)

சித்ரா பௌர்ணமி..! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!!

Saduragiri
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
 
வத்திராயிருப்ப அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
 
பிரதோஷம் மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கடந்த 21ஆம் தேதி முதல் நாளை வரை நான்கு நாட்கள் வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் மொட்டை எடுத்து தங்களின் நேர்த்திக்கடன்  செலுத்தினர்.  வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.