1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (21:27 IST)

கோவையை அடுத்து மேலும் ஒரு நகரில் 6 நாட்கள் முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தினந்தோறும் அதிகரித்து வருவதால் குறிப்பாக கோவையில் அதிகரித்து வருவதால் அந்நகரில் நாளை முதல் ஜூலை 27-ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி அவர்கள் தெரிவித்துள்ளார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவையை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக அதிக கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் பால், மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மேலும் வரும் ஞாயிறு அன்று அதாவது ஜூலை 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது