வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (20:59 IST)

புதுச்சேரியில் வாரம் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு: எந்த கிழமை என அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் தினந்தோறும் மிக அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது
 
இதனை அடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் விரைவில் புதுவையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர் தான் தனக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் நாராயணசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் புதுச்சேரியில் கடைகள் திறக்கும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்படுவதாகவும் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இனி கடைகள் திறக்க அனுமதி என்றும் முதல்வர் கூறியுள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது