வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:35 IST)

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி: சென்னையில் எத்தனை பேர்?

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 314,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம்  1,12,059 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் 5,278  பேர்கள் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 256,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேல்ம் தமிழகத்தில் இன்று 69,697 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து மொத்தம் 33,10,036 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது