திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:39 IST)

சினிமா பாணியில் கேன்களை ரோட்டில் வைத்து… திமுக நிர்வாகி படுகொலை!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வள்ளியூரைச் சோந்தவா் முத்துராமன். இவருக்கு திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தன் உறவினரை காரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது சாலையில் மண்ணெண்ணெய் பேரல்கள் கிடப்பதைப் பார்த்த அவர் காரில் இருந்து இறங்கி அதை அப்புறப்படுத்தியுள்ளார்.

அப்போது அவரை சூழ்ந்த கும்பல் ஒன்று சரமாரியாக வெட்ட ஆரம்பித்துள்ளது. அவர் அலறவே அக்கம்பக்கத்து மக்கள் வர, கும்பல் தப்பியோடியது. வெட்டுக்காயம் பட்ட முத்துராமன் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த கொலைக்கு முன் விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.