1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஜனவரி 2022 (07:39 IST)

பொங்கல் சிறப்பு பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிலையங்களில் இருந்து கிளம்புகின்றன?

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து துறை இயக்க உள்ளது
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் உள்ளதாகவும் சென்னையிலிருந்து மட்டும் 2100 பேருந்துகளும் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் சிறப்பு பேருந்துகள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436  ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151, 044-2474 9002 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.