ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (13:51 IST)

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

Chennai Rain
தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இன்று வழக்கத்தை விட ஐந்து டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் ஆகிய பகுதிகளில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்று வீசக்கூடும் என்றும் நாளை முதல் செப்டம்பர் 18 வரை 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva