வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவில்கள்: குவிந்த பக்தர்கள்!

நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட கோவில்கள்: குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்கள் திறக்கப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது அடுத்து அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் குவிந்து வருகின்றனர். 
 
இன்று முதல் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது அடுத்து என்பதும் அதில் வார இறுதி நாட்களிலும் கோவில்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சென்னை வடபழனி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சமீபத்தில்தான் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது