திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (04:53 IST)

சென்னை ராமகிருஷ்ண மடத்தில் ரஜினி! ஆன்மிக அரசியலை உறுதி செய்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தன்னுடைய அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் கூறினார்

இந்த நிலையில் தனது பாதை ஆன்மீக பாதை என்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள ஆன்மிக தலைவர் கெளதமானந்தாஜி மகராஜ் அவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு எந்தச் செய்தியும் வெளியாகவில்லை என்பதும் இதுவொரு யாரும் எதிர்பாராத சந்திப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தன்னுடைய அரசியல் கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் அவர் இன்னும் ஒருசில ஆன்மீக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.