ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (13:46 IST)

கேரளா கோவிலில் பறக்கும் தமிழக அரசு வேட்டி!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோவிலில் தமிழக அரசின் விலையில்லா வேட்டிகள் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
கேரளத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்குள் செல்லும்போது, ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலையும் அணிந்து செல்லவேண்டும் என்பது நியதி.
 
அப்படியும் புதிதாக வருபவர்களில் சிலர், வேட்டி, சேலை அணிந்துவராமல் வருவதுண்டு. இவர்களுக்காக கோவிலின் நுழைவாயில் அருகே தேவஸ்தானம் சார்பில் வேட்டி, துண்டு, கேரள பெண்கள் அணியும் முண்டு ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
 
சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து சென்ற பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த பேண்ட்-சர்ட் ஆடைகளோடு ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கிருந்த தேவஸ்தான கடையில் வேட்டி வாங்கியுள்ளனர்.
 
அதில் ரூபாய் 90க்கு வாங்கிய வேட்டியில், 2016 விலையில்லா வேட்டி, சேலை திட்டம் - சங்க பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தமிழக அரசால் பண்டிகை காலங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டிகள் பண்டல் பண்டலாக விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அதிகாரிகள், ஆளும். வர்க்கத்தினர், அமைச்சர்கள் தொடர்பு, ஒத்துழைப்பு இன்றி ஒரு மாநிலத்தில் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக தயாராகும் வேட்டிகள், வேறு மாநிலத்திற்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது சாத்தியமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.