1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (18:56 IST)

உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் முதலிடம்

François Bettencourt
பிரபல புளூம்பெர்க் வெளியிட்ட  உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
 

புளூம்பெர்க் நிறுவனம் ஆண்டுதோறும் உலகின் பணக்காரன் ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு உலகின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  அழகுசாதன பொருட்கள்  நிறுவன உரிமையாளர் பிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.

பிரான்காய்ஸ் பெட்டன்கோர்டின் தாத்தா ஆரம்பித்த இந்நிறுவனத்தை இவர் தற்போது நிர்வகித்து வருகிறார். இவருக்கு 100.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துகள் உள்ளதாகவும், தற்போது, இவரது பங்குகளின் மதிப்பு அதிகரித்த நிலையில், சொத்துகளின் மதிப்பு  உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்த இவர் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.