திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:44 IST)

ரயிலில் ஆயுதங்களுடன் ரகளை: காவல்நிலையத்தில் கண்ணீர் சிந்திய மாணவர்கள்

சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடும் ரயிலில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு வைரலான நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.



 
 
இதுகுறித்த விசாரணையில் ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்டமாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் சில மாணவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினர். இனிமேல் வாழ்க்கையில் ரயிலில் வரமாட்டோம் என்றும் இந்த ஒருமுறை தங்களை மன்னித்துவிடும்படி கதறி அழுத காட்சியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.