வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஜூலை 2023 (21:06 IST)

நடிகர் அஜித்தை இயக்குவது எப்போது? லோகேஷ் கனகராஜ் பதில்

லியோ பட இயக்குநர்  லோகேஷ் கனகராஜ் நடிகர் அஜித்துடன் இணைந்து பணியாற்றுவது பற்றி பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை  செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

கடந்த 14 ஆம் தேதி இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்த  நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், இன்று  கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற கல்லூரி  முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனக ராஜிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதில்,ஒரு மாணவர்,  தளபதியை வைத்து படம் பண்ணிவிட்டீர்கள்…. இனி தல அஜித்தை வைத்து எப்போது படம் பண்ணுவீர்கள்….அது எல்.சி.யுவுக்கும் வருமா என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ‘’முதலில் வாய்ப்பு கிடைக்கட்டும் ..அதன் பிறகு பண்ணுவோம் ‘’என்று கூறினார்.