வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (10:39 IST)

உள்ளாடைக்குள் 4 கிலோ தங்கம் வைத்து கடத்தல்.. 2 பெண்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது..!

Gold
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் தங்கத்தை கடத்தும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் தங்கம் கடத்தி வருவதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர் என்றும் செய்திகளை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் குஜராத்தில் இருந்த  வந்த நான்கு பேர்கள் தங்களுடைய உள்ளாடைகளில் தலா ஒரு கிலோ தங்கம் கடத்தி வந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மலேசியாவில் இருந்து உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த குஜராத்தை சேர்ந்த இரண்டு தம்பதியினர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் 
இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் தனி படை போலீஸ் சார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த குஜராத்தை சேர்ந்த இரண்டு தம்பதிகளை தனி அறைகளுக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர்கள் நான்கு பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தலா ஒரு கிலோ தங்க கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்தது தெரிய வந்தது 
 
இதை எடுத்து நான்கு கிலோ தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் நான்கு பேரையும் கைது செய்தனர்.
 
Edited by Mahendran