அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர் மீண்டும் அதிமுகவில்.. ஈபிஎஸ் வாழ்த்து..!
அதிமுகவில் என்ன இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மீண்டும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதை அடுத்து அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனை அடுத்து அவருக்கு கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் என்ற பதவியும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென அவர் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அவர் அதிமுகவில் இணைந்து அடிப்படை உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Edited by Mahendran