ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (22:37 IST)

சசிகலா அணியில் உயிருள்ளவரை இருப்பேன்! செந்தில் பாலாஜி கூறுவதற்கு காரணம் வெயிட்டான கவனிப்பா?

சசிகலா அணியின் ஆதரவாளரும், தமிழக முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியும் அவரது ஆதரவாளர்களும் ஓபிஎஸ் அணிக்கு செல்லவுள்ளதாகவும், இதனால் சசிகலா அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கடந்த சில மணி நேரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன



 


இந்நிலையில் இதுகுறித்து செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க நான் அவருடைய அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்"றன. அது என் உயிர் உள்ளவரை நடக்காது. நான் உயிர் உள்ளவரை  சசிகலா தலைமைக்கே ஆதரவளிப்பேன். ஓபிஎஸ் அணிக்கு நான் ஆதரவளிக்க இருப்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்பப்படுகிறது' என்று கூறினார்.

இந்நிலையில் சசிகலா அணியில் இருந்து யாராவது வெளியேறும் நிலையில் இருந்தால் உடனே அவருக்கு அதிமுக தலைமை வெயிட்டாக கவனிப்பதாகவும், அதனால்தான் அவர்கள் தங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்வதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.