1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:17 IST)

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வேலைகளை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் 
 
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார் அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சி கடையில் இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது