யேசு கிறிஸ்து விவகாரம் : இளையராஜா மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

Last Modified செவ்வாய், 27 மார்ச் 2018 (14:08 IST)
யேசு கிறிஸ்து விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்து தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிறிஸ்துவ அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

 
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் ரமணர் உயிர்த்தெழுந்தார் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது எனக் கூறியதாக செய்திகள் வெளியானது. எனவே கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கிறிஸ்துவ நல்லெண்ன இயக்கத்தின் பொதுச்செயலாளர் தயாநிதி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று காலை ஒரு புகார் மனு அளித்தார். அதில், கிறிஸ்துவர்களின் மனதை காயப்படுத்திய இளையராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :