திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 மார்ச் 2018 (14:36 IST)

மு.க. ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் திடீர் அழைப்பு

திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் சொடக்கு போடும் நேரத்தில் இந்த ஆட்சியை தன்னால்  வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியும் என்று கூறினார். இதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்திருந்தபோதிலும் ஸ்டாலின் எப்படி இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும் என்ற வாதங்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றது

இந்த நிலையில் சற்றுமுன்னர் தமிழக கவர்னரிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் அவர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது பல முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 
மேலும் சமீபத்தில் பல்கலைக்கழகங்கள் மீதான ஊழல் முறைகேடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. எனவே பல்கலைக்கழக வேந்தரான கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் ஊழல் குறித்து முறையிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.