திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (15:38 IST)

முன்னாள் திமுக எம்.எல்.ஏ மரணம்

கடந்தாண்டு இந்தியாவில் கொரொனா நுழைந்தது முதலே எதிர்பாராத பல பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் மரணம் அடைவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.