1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former ADMK MLA Vedaranyam Kamaraj dismissed

மாஜி எம்எல்ஏவுக்கு வேட்டுவைத்த ஜெயலலிதா

அதிமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ்
அதிமுகவிலிருந்து வேதாரண்யம் மாஜி அதிமுக எம்எல்ஏ காமராஜ் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
 

 
வேதாரண்யம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ், வேதாரண்யம் நகரச் செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும், சட்டசபை தேர்தலின்போது இவருக்கு அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
அவருக்குப் பதில் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். மேலும், தமிழ க அமைச்சராவும் பொறுப்பேற்றார்.
 
இந்த நிலையில், தேர்தல் நேரத்தில், தேர்தல் பணியில் ஈடுபடவில்லை என்றும், திமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல் முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தான், காமராஜை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார் ஜெயலலிதா.
அடுத்த கட்டுரையில்
சுவாதி கொலை எப்படி நடந்தது? பரபரப்பான காட்சிகளுடன் வெளியான குறும்படம்