1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Swathi murder - short film relese

சுவாதி கொலை எப்படி நடந்தது? பரபரப்பான காட்சிகளுடன் வெளியான குறும்படம்

இன்போசிஸ்
இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கொலை எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் பரபரப்பான காட்சிகளுடன் குறும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 

 
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து, கொலையாளியை பிடிக்க பல்வேறு கோணங்களில் முயன்ற காவல்துறை, கடைசியில், நெல்லையில், கொலையாளி ராம்குமார் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
 
இதனைடுத்து, ராம்குமார் சென்னை கொண்டுவரப்பட்டு, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
ராம்குமார் மீது ஏற்கனவே, சென்னை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், இன்போசிஸ் பொறியாளர் சுவாதி கொலை எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் பரபரப்பான காட்சிகளுடன் குறும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
 
 
About Writer
K.N.Vadivel
அடுத்த கட்டுரையில்
மாஜி எம்எல்ஏவுக்கு வேட்டுவைத்த ஜெயலலிதா