வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (09:09 IST)

இந்தியாவோட பெரிய டீலிங் வைக்க போறேன்! – சஸ்பென்ஸ் செய்யும் ட்ரம்ப்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் இந்தியாவோடு மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிப்ரவரி 24ல் இந்தியா வரும் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை 25ம் தேதி காண செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபரின் இந்திய வருகையின்போது முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல இந்திய பயணம் குறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் “இந்தியாவோடு மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை செய்ய போகிறேம். ஆனால் அது என்னவென்று இப்போது சொல்லமாட்டேன்” என கூறியுள்ளார்.

மேலும் தன்னை காண 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என நரேந்திர மோடி கூறியிருப்பதாகவும், அதை காண ஆவலோடு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.