புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (13:18 IST)

மாணவர்களின் காலை சிற்றுண்டியில் என்னென்ன வகைகள்: தமிழக அரசு அறிவிப்பு

student food
மாணவர்களின் காலை சிற்றுண்டியில் என்னென்ன வகைகள்: தமிழக அரசு அறிவிப்பு
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த சிற்றுண்டியில் என்னென்ன வகை உணவுகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 
திங்கட்கிழமை ரவா உப்புமா, செவ்வாய்க்கிழமை ரவா கிச்சடி, புதன்கிழமை ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா  கேசரி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
மேலும்  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவிற்கான மூலப் பொருளின் அளவு 50 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள் என்றும், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.