செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (08:11 IST)

கொரோனா எதிரொலி… பூக்கள் விலை சரிவு – விவசாயிகள் பாதிப்பு!

கொரோனா லாக்டவுன் காரணமாக பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கோயில் விழாக்களுக்கு தடை, திருமணம் போன்ற காரியங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.