முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாவது அலையின்போதும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது தெரிந்ததே. தற்போது அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது