திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:09 IST)

கடும் போக்குவரத்து பாதிப்பு- பிரபல சினிமா விமர்சகர் புகார்

chennai
சென்னையில் 100 அடிசாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு  அரசு உடனடி தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்று பிரபல சினிமா விமர்சகர்  வலைபேச்சு அந்தனன் டுவீட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’100 அடி சாலையில் இருந்து சாலிகிராமம் செல்வதற்கான சிம்ஸ் மருத்துவமனை அருகிலிருக்கும் மாதா கோவில் சாலை இது. சாலிகிராமத்தை இணைக்கும் மற்றொரு சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. மிக மிக முக்கியமான இந்த இணைப்பு சாலையில் சிம்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும், அருகிலிருக்கும் போரம் மாலுக்கு செல்பவர்களும் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு. இதனால் பெரும் சிக்கலுக்குள்ளாகும் வாகன ஓட்டிகளுக்கு அரசு உடனடி தீர்வை ஏற்படுத்தித்தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.