1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (09:41 IST)

சென்னை அருகே மீன் வியாபாரி ஓடஓட வெட்டி கொலை: அதிகாலையில் நடந்த கொடூரம்

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை உள்பட கிரிமினல் குற்றங்கள் அதிகமாகி வரும் நிலையில் இன்று அதிகாலை சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை என்ற பகுதியில்  மீன் வியாபாரி ஒருவர் ஓட ஓடி  விரட்டி வெட்டிக் கொலை கொலை செய்யப்பட்டார்
 
இந்த கொலையை 5 பேர் கொண்ட மர்ம  கும்பல் நடத்தியுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட  மீன் வியாபாரி  சீனிவாசன் என்பவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
இந்த கொலை குறித்து  பள்ளிக்கரணை போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.