ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (07:47 IST)

கொரோனா: குணமடைபவர்களின் விகிதம் அதிகம்! ஆறுதல் செய்தி

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் குணமாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.97 லட்சமாக உள்ளது. பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் செல்கிறது. இந்நிலையில் கொரோனா நிலவரம் பற்றி பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லவ் அகர்வால் இந்தியாவில் குணமடையும் விகிதம் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95,527 பேர் முழுவதும் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். நம் நாட்டில் குணமடையும் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. மேலும் கொரோனா தொற்றால் இறந்தவர்களில் 73 சதவீதம் பேருக்கு வேறு நோய்கள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய கவனம் முழுவதும் இப்போது கட்டுப்பாட்டு பகுதிகளில்தான் உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.