வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2024 (17:45 IST)

அமைச்சரவை மாற்றத்திற்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்.. தேதி அறிவிப்பு..!

தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக உள்ள உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்; சில அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்; மற்றும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும். கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற இருப்பதாகவும், குறிப்பாக வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva