செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (18:11 IST)

கிணற்றுக்குள் மயங்கி கிடந்த வாலிபர்கள்…. உண்மையை மறைத்ததால் பறிபோன தீயணைப்பு வீரர் உயிர்!

பெரம்பலூரில் கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த வாலிபர்களைக் காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் பலியாகியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் எனும் கிராமத்தில் கிணற்றுக்கு வெடிவைக்க முயன்ற பாஸ்கர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய இரு வாலிபர்கள் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களிடம் வெடி வைத்த தகவல் பற்றி எதுவும் சொல்லாததால் ராஜ்குமார் என்ற வீரர் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். இதனால் விஷவாயு தாக்கிய அவரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே பாஸ்கரை காப்பாற்ற அவர் மேல் கயிற்றைக் கட்டியுள்ளார். ஆனால் அவர் கிணற்றிலேயே மயங்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான சக தீயணைப்பு வீரர்கள் ஒன்றுசேர்ந்து ராஜ்குமாரை மேலே தூக்கியுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜ்குமாரும், ராதாகிருஷ்ணனும் உயிரிழந்துள்ளனர். பாஸ்கர் மற்றும் சில தீயணைப்பு வீரர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.