செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (12:25 IST)

கொரோனா மருந்து வெற்றி பெற்றது! – ரஷ்யாவின் சந்தோஷமான அறிவிப்பு!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் ரஷ்யா மனிதர்களிடம் சோதனை நடத்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. அவை அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே உள்ள நிலையில் அமலுக்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்களிடையே சோதித்த நிலையில் அது வெற்றியடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் இந்த கண்டுபிடிப்பால் கொரோனாவுக்கு முதல்முறையாக வெற்றிகரமான மருந்தை கண்டுபிடித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நாளேடான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மருந்து சோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்ற நிலையில் சோதனை செய்யப்பட்டவர்கள் முதல் குழுவினர் ஜூலை 15ம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் ஆக உள்ளனர்.

ரஷ்யாவின் சேச்சனோவ் பல்கலைகழகம் தயாரித்துள்ள இந்த மருந்தின் சில மேம்படுத்தலுக்கான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த மருந்தின் உற்பத்தியையும் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த மருந்தின் பெயர் மற்றும் இன்ன பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.