திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (20:04 IST)

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!

செங்கல்பட்டில் காய்கறி வண்டி ஒன்றில் மூட்டையோடு மூட்டையாக முதியவரின் பிணம் ஒன்று கடத்தி செல்லப்பட்டது அந்த பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள்...
செங்கல்பட்டு அருகே சென்ற காய்கறி வண்டியில் காய்கறி மூட்டைகளுக்கு இடையே இறந்த முதியவர் ஒருவரின் சடலம் மற்றும் உயிருடன் இருந்த 2 முதியவர்களை கடத்தி சென்றுள்ளனர். 
 
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த வண்டியை மடக்கிப்பிடித்தனர். மேலும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றியதோடு, முதியவர்கள் இருவரையும் மீட்டனர். 
 
இந்த சம்பவம் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த தீவிர விசாரணையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.