1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Rate Spikes While Silver Plummets by ₹10,000 per Kg in Chennai

தங்கம் விலை உயர்வு.. வெள்ளி விலை ரூ.10,000 குறைவு.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்..!

Gold Price Hike
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகின்றன. 
 
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 16,243 ஆக உள்ளது. நேற்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், இன்றும் அந்த உயர்வு தொடர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிலோவுக்கு ரூ. 10,000 சரிந்து, தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,90,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 290-க்கு கிடைக்கிறது. 
 
தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும், வெள்ளியின் விலை இறங்குமுகமாகவும் இருப்பது சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விலை மாற்றத்தை தீவிரமாகக் கவனித்து வருகின்றனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
புதுமண தலித் தம்பதியினரை கோவிலுக்குள் விட மறுத்த நபர்.. தெய்வ வாக்கு கூறுவது போல் நடித்தது அம்பலம்..!