திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (12:55 IST)

நாங்க சொன்னபடி செஞ்சாதான் புதுபடம் ரிலீஸ்! – தயாரிப்பாளர்கள், திரையரங்குகள் மோதல்?

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகும் புது படங்கள் உடனே ஓடிடியில் வெளியாவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா காரணமாக திரையரங்குகள் முடங்கியிருந்த சூழலில் தற்போது தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது 100 சதவீதம் இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

முன்னதாக திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படம் இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரைப்பட உரிமையாளர்கள் சிறிய பட்ஜெட் படங்கள் 30 நாட்களும், பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ படங்கள் 50 நாட்களும் திரையரங்குகளில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஒப்பந்தமாக தயாரிப்பாளர் சங்கம் ஏற்படுத்தி கையெழுத்திட வேண்டும் திரையரங்க உரிமையாளர்கள் முனைப்பு காட்டி வருவதால் எதிர் வரும் வாரங்கள் ரிலீஸ் ஆக தயாராக உள்ள படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.