வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (14:18 IST)

8 வயது சிறுமியையும் விட்டுவைக்காத முதியவர்:7 வருடம் சிறை தண்டனை

திருப்பூரில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 65 வயது முதியவருக்கு 7 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனீபா. இவருக்கு வயது 65. இவர் வீட்டிற்கு அருகில் ஒரு குடும்பத்துடன் 8 வயது சிறுமி ஒருவரும் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அந்த 8 வயது சிறுமி வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிந்தார்.

அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவரான அனிபா, அச்சிறுமியிடம் இருவரும் சேர்ந்து தன்னுடைய வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று விளையாடலாம் என்று கூறியிருக்கிறார்.

8 வயது சிறுமியும் ஒத்துகொண்டு அவருடன் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியை தன்னுடைய வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்ற அனீபா, அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலீல் ஈடுபட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியில் வசித்துவந்த பெண் ஒருவர் பார்த்துவிட்டு அந்த சிறுமியின் பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு நாள் அந்த சிறுமியிடம் அவரின் பாட்டி விசாரித்துள்ளார்.

அந்த சிறுமியும் பாட்டியிடம் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார். இதன்பின்பு இது குறித்து அச்சிறுமியின் பாட்டி, மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தந்தார்.
இது சம்பந்தமான விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் 7 வருட சிறை தண்டனையும் ரூ.10,000 அபாராதமும் அனீபாவிற்கு அளிக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே சிறுமிகளின் மேல் நடத்தப்படும் பல பாலியல் அத்துமீறல்கள் பற்றிய செய்திகள் அதிகமாகவே வலம் வந்தன.

ஆனாலும் பல வழக்குகளுக்கு சரியான தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், இத்தீர்ப்பு நீதிமன்றங்களின் மீது சிறு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என பலர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.