திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (17:39 IST)

இறந்த பெண் இன்ஸ்பெக்டர் சடலத்தை தூக்கிய பெண்போலீஸார் !

வீடுவரை உறவு ...வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை ... கடைசி வரை யாரோ என்ற அற்புதமாப வரிகளில் மனிதனின் உறவையும் அவன் இறுதி பயணத்தையும் பாடியிருப்பார் கண்ணதாசன். இப்படி மனிதனின் இறுதிச் சடங்கில் பெண்கள் இறந்தவரின் சடலத்தை தூக்கி நாம் எங்கும் பார்த்ததில்லை. எங்காவதுதான் அப்படி அபூர்வமாக நடக்கும்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் உ.பி.,  மாநிலம் அமேதியில் உள்ள பராலுயா கிராமத்தில்  மர்ம நபர்களாளல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலத்தை ஸ்மிருதி இரானி தூக்கிச் சென்றது பரவலாகப் பேசப்பட்டது.
 
இந்நிலையில்  சென்னை வேப்பேரிப் பகுதியில் வசித்து வந்த பெண் போலீஸான ஸ்ரீதேவி இறந்தத நிலையில் அவரது சடலத்தை உடன் பணியாற்றும் பெண் போலீஸார் இணைந்து தூக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீக காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீதேவி கடந்த 11 ஆம் தேதி உயிரிழந்தார்.  அவரது இறுதிச் சடங்கின்போது  அவருடம் பணியாற்றி வந்த பெண் போலீஸார் நட்பின் நிமித்தமா, அவரது சடலத்த்தை கண்ணீருடம் தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.