1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (20:21 IST)

எவ்ளோ பெருசு..கேரளாவில் பிடிப்பட்ட 14 அடி நீள ராஜ நாகம் .. வைரல் போட்டோ

நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டிய பகுதிகளில் 14 நீளமுள்ள ராஜநாகத்தை  பிடித்துள்ளனர். 
இயற்கை அரண் சூழ்ந்த பகுதியில் என்றில்லாமல் எல்லா பகுதியிலும்  இன்று பாம்புகள் வாழ்கின்றன. பாம்புகளின் ரத்தம் குளிர்ச்சி என்பதால் அவை , பகலில் வெயிலில் காய்ந்திருக்கும் தார்சாலையின் மேல் தன் உடலை அழுத்தி படுத்து தன்னை இதமாக்கிக்கொள்ளும்.
  
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை ஒட்டியுள்ள கேரளா பகுதியில் ஒரு ராஜநாகம் புகுந்துள்ளது. மிகவும் கொடிய விசத்தன்மை கொண்ட ராஜநாகம் புகுந்ததை மக்கள் பார்த்து அலறியுள்ளனர். பின்னர். அப்பகுதியைச் சேர்ந்த  பாம்பு பிடிப்பவரை அழைத்து, இந்தப் பாம்பை பிடிக்கச் செய்துள்ளனர்.
 
பின்னர், கேரள எல்லையில் உள்ள கீழ்நாடுகாணி என்ற பகுதியில் இந்த பாம்பை பத்திரமாக விட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.