வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (16:21 IST)

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்! – கால்நடை ஆய்வாளர்கள் சங்கம்!

PR
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்


 
கோவை சிவானந்த காலனி பகுதியில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில்,  கால்நடை ஆய்வாளர் பயிற்சியை தொடங்கி கால்நடை ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆறாவது ஊதிய குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

இதில் கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி துவக்கி வைத்தார்.மேலும் கோட்ட செயலாளர் கோவை பிரேம்குமார், மாவட்ட செயலாளர் ஈரோடு நசீர், மாவட்ட செயலாளர் திருப்பூர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் நீலகிரி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கால்நடை ஆய்வாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.