பேச்சுவார்த்தைக்கு ஓகே.. கோர்ட் வேண்டாம்! – விவசாய சங்கங்கள் முடிவு!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாய சங்கங்கள் அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 48 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளோடு மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தால் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பதாக தெரிவித்தது. இதனால் வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் விவசாய சங்கங்கள் ஜனவரி 15ல் மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ளதாகவும், நீதிமன்றம் அமைக்கும் குழுவுடன் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளன.