ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (17:37 IST)

தக்காளி விலை ஒரு கிலோ 10 ரூபாய்.. விவசாயிகள் அதிர்ச்சி..! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதாகவும் சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகமாக இருப்பதாகவும் இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்படுவது விவசாயிகளுக்கு அதிர்ச்சியையும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி விலை ஒரு கிலோ ரூ50 முதல் 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது மழை பாதிப்பு குறைவு மற்றும் விளைச்சல் அதிகம் காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக தக்காளி பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை தான் ஒரு கிலோ விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தக்காளி விலை 14 கிலோ கொண்ட பெட்டி 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 14 கிலோ எடை உள்ள பெட்டி 150 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை மதுரை கோவை ஆகிய முக்கிய நகரங்களில் தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி போலவே வெங்காயம் விலையும் வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறப்படுகிறது

Edited by Siva