கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிவு! ஆனால் பெட்ரோல் விலை?
கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஒரு பீப்பாய் விலை 69.51 டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதன் பலனை மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்காமல், மக்களுக்கும் அதன் பலனை தர வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva