ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (22:31 IST)

எங்களையும் கொஞ்சம் கவனிச்சிக்கொங்க கமல்: விவசாயிகள் கோரிக்கை

இப்போதெல்லாம் அரசிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் கமல் மூலமாகத்தான் நடைபெறுகிறது. கமல் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கணிக்கப்படுகிறது



 
 
ஊழலை ஒழிக்க கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை நல்ல பலன் கொடுத்த நிலையில் எங்கள் பிரச்சனை குறித்தும் கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கமலிடம் வேண்டுகோள் தெரிவித்துள்ளனர்  தமிழக விவசாயிகள்
 
இன்று கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் விவசாயிகள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளுக்காக அவர் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குரல் கொடுத்தால் நிச்சயம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கேட்கும் என்றும் தெரிவித்தனர். இதற்கு கமல்ஹாசனும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அனேகமாக விரைவில் விவசாயிகள் பிரச்சனை குறித்தும் காரசாரமாக ஒரு டுவீட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது