பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் சிறப்பினம் ! அரசு வேலை – முதல்வர் உத்தரவு

edapadi palanisamy
Sinoj| Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (21:18 IST)
 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள மயிலாப்பூரை சேர்ந்த போக்குவரத்து காவலர் அருண்காந்தி, சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :                                                                                                                                                                                                                  காவலர் திரு.அருண்காந்தி அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், திரு.அருண்காந்தி அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :