1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (18:29 IST)

ஃபேன்சி நம்பர் கட்டணம் ரூ.8 லட்சம் என உயர்கிறதா?

car
ஃபேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதால் 80 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் பேன்சி நம்பர் வேண்டும் என்றால் அதற்கென கட்டணம் பெற்றுக் கொள்ளலாம் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஆர்டிஓ மூலம் பெற முடியாத ஃபேன்சி எண்களுக்கு சிறப்பு கட்டணமாக 80 ஆயிரம் ரூபாய் முதல் 8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது .
 
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் பிற வாகனங்களுக்கு பதிவு ஆணையத்தின் மூலம் பெண்களை பெற ரூபாய் 20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகும் என்று கூறப்படுகிறது
 
Edited by siva