திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (22:13 IST)

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் படுகொலை !

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் அனைவரும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஜஸ்தீப் சிங்(36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர். இவர்களுக்கு 8 மாதப் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் இவர்களுடன் சேர்ந்து இவரது உறவினரும் அமன் தீ சிங்கும் மெர்சிட் கவுன்டியில் வைத்து கடத்தப்பட்டனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடத்தப்பட்ட 4 பேரின் சடலம்  ஒரு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேனுவேல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏன் கொன்றார் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Edited by Sinoj